தொகுப்பு: ஜெ.சரவணன்
பைரசி, பிரைவசி இந்த வார்த்தைகள் தான் கடந்த வாரத்தில் அதிகம் பேசப்பட்டன. மாஸ்டர் படத்துக்கு முன்பே காட்சிகள் லீக் ஆகிவிட்டதாக சர்ச்சை கிளம்பியது. ஆனால், அதுவும் படத்தின் புரோமோஷனுக்கு நன்றாகவே பயன்பட்டது எனலாம். அடுத்து, பிரைவசி. வாட்ஸ்-அப் செயலியில் நம்முடைய தகவல்கள், மெசேஜ், வீடியோ, ஆடியோ, லொகேஷன் என பகிரும் அனைத்தையும் அந்நிறுவனம் உளவு பார்ப்பதாக செய்தி பரவியது. இதனால் பலர் வாட்ஸ்-அப்பை டெலிட் செய்தனர். இதற்கிடையில் இதற்கு மாற்றாக நாங்கள் இருக்கிறோம் என்று கேப்பில் கிடா வெட்டின சிக்னல், டெலிகிராம் நிறுவனங்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் பிரைவசி என்ற ஒன்றே இல்லை என்பதுதான் நிஜம். நாம் பகிரும் விஷயங்கள் நம்மையே பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது!
கரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. - பிரதமர் மோடி
ஆமா, போட்டோவுக்கு மட்டும்தான் முந்தணும்!- மெத்த வீட்டான்