என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
கேரளத்தில் தங்கக் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டவர்கள், கேரளத்தின் முக்கிய அரசியல்புள்ளி ஒருவர் கேரளத்திலிருந்து டாலர்களை வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி கொண்டு சென்றதாக தகவல் தந்தனர்.
இதையடுத்து, டாலர்களை வளைகுடா நாடுகளுக்குக் கடத்திய அந்த நபர் கேரள சபாநாயகர் ராமகிருஷ்ணன் தான் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார். இதையடுத்து கேரள அரசியல் களம் சூடுபிடித்தது. ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தவே, இருமுனைத் தாக்குதலால் கடும் நெருக்கடிக்கு ஆளானது ஆளும் இடது முன்னணி.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், “எனது உறவினர்களும், என் தொகுதியைச் சார்ந்த பலரும் வளைகுடா நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் நடத்தும் அமைப்புகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவே அடிக்கடி நான் வளைகுடா நாடுகளுக்குச் சென்றேன்’’ என்று விளக்கம் அளித்தார்.