ஜெய்
jeyakumar.r@hindutamil.co.in
பெருந்தொற்றின் பாதிப்புகளின் தொடர்ச்சியாக, முற்றிலும் முடங்கிவிடக்கூடும் என அஞ்சப்பட்ட துறைகளில் பதிப்புத் துறையும் ஒன்று. எதிர்பார்த்தது போலவே, பதிப்பாளர்களுக்கு வருமானம் பெற்றுத் தரக்கூடிய சென்னைப் புத்தகக் காட்சி இந்த முறை நடத்தப்படவில்லை. இப்படியான சூழலை ஊகித்துப் பல பதிப்பகங்கள் புத்தகங்கள் வெளியிடாமல் இருந்துவிட்டன. அதேசமயம், இந்த நெருக்கடிக் காலகட்டத்திலும் சில புத்தகங்கள் வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றுவிட்டன. அவற்றுள் ஒன்று, ‘தனுஜா: ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்’ நூல்.
கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல், ஜெர்மனியில் வாழும் தனுஜா சிங்கம் எனும் திருநங்கையின் தன் வரலாற்றுப் பதிவு. பிரான்ஸில் வாழும் ஈழத் தமிழ் எழுத்தாளர் ஷோபாசக்தி இதன் பதிப்பாசிரியர் என்பது இந்த நூலுக்குக் கூடுதல் சிறப்பு. இந்த நூல் இணையத்தின் மூலம் நல்ல விற்பனை கண்டுவருவதாக அதன் பதிப்பாளர் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.
யூடியூப் பிரபலம்