வம்பாய் திணித்த ஜம்போ பட்டியல்!- தடதடக்கும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நியமன விவகாரம்

By காமதேனு

குள.சண்முகசுந்தரம்
readers@kamadenu.in

32 துணைத் தலைவர்கள், 57 பொதுச் செயலர்கள், 104 செயலர்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அகில இந்திய தலைமை அண்மையில் அறிவித்த மெகா பொறுப்பாளர் பட்டியல், கடாயில் கொட்டிய கடலை கணக்காய் கடுமையாக வறுபட்டுக் கொண்டிருக்கிறது!

வழக்கமாக காங்கிரஸ் கட்சியின் அதிரடி(!) நடவடிக்கைகளை மற்ற கட்சிகள் தான் பொழுது போக்கு அம்சமாக எடுத்துக் கலாய்க்கும். ஆனால், இந்த முறை கதர்பார்ட்டிகளே கட்சித் தலைமைக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டு கலாய்த்துக் கொண்டிருக் கிறார்கள்.

பட்டியல் வெளியான  உடனேயே அவசரமாக தனது ட்விட்டர் கடையைத் திறந்த கார்த்தி சிதம்பரம்,  ‘இவ்வளவு பெரிய ஜம்போ கமிட்டியால் எந்தப் பயனும் இல்லை. 32 துணைத் தலைவர்கள், 57 பொதுச் செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்டுள்ள யாருக்கும்  எந்த அதிகாரமும் இருக்காது. அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பதும் இருக்காது’ என்று ட்விட் போட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE