மீண்டும் கிளம்பும் பொள்ளாச்சி பூதம்!- அதிமுகவைப் பணியவைக்கும் பாஜகவின் அஸ்திரமா?

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கில், ஒரு வருடம் 11 மாதங்கள் கழித்து, மேலும் 3 பேரைக் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது சிபிஐ! “இவர்கள் முன்பே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்கள்; இன்னும் பலர் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்" என்று எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டிருக்கும் சமயத்தில்,  “ரஜினியை பயன்படுத்தி எங்களுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்த பாஜக, அது நிறைவேறாததால் இந்த வழக்கைத் தூசு தட்டி எடுத்துள்ளது” எனும் குரல்கள் அதிமுகவிலிருந்து எழத் தொடங்கியிருக்கின்றன.

பதறவைத்த பாலியல் குற்றம்

பொள்ளாச்சியில், கல்லூரியில் படிக்கும் இளம் பெண்களைக் காதலிப்பது போல் நடித்து, ஏமாற்றி பாலியல் வல்லுறவு செய்த ஒரு கும்பல், பாலியல் வல்லுறவுச் சம்பவங்களைக் காணொலியாக எடுத்து இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டிப் பணம் பறித்ததாகவும் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதிமுக பிரமுகர் ஒருவரின் சிபாரிசுடன் 2019 பிப்ரவரி 24-ல் போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில் சிக்கிய இளைஞர்களின் செல்போன்களில் கிடைத்த காணொலிகள் தமிழகத்தையே அதிரவைத்தன.

VIEW COMMENTS