இசை வலம்: தீட்சிதர் - பீத்தோவன்- ஒரு சங்கீத சங்கமம்

By காமதேனு

யுகன்
readers@kamadenu.in

பிரபல சூஃபி மற்றும் கவாலி பாடகரான ஜாவேத் அலி, திரையிசையிலும் ரசிகர் வட்டம் கொண்டவர். ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரது இசையில் பாடியிருக்கும் இவர் தற்போது, ‘க்யுன் குதா கஃபா ரஹா’ எனும் தனிப் பாடலைப் பாடியிருக்கிறார்.

இசைச் செயலிகள் பலவற்றிலும் தற்போது ஒலித்துக்கொண்டிருக்கும் இந்தப் பாடல், காதல் தோல்வி, சுயபச்சாதாபம், தனிமையின் கொடுமை, குற்றவுணர்ச்சி என உணர்ச்சிகளின் சங்கமமாக ஒலிக்கிறது. எழுதி இசையமைத்திருக்கிறார் ரமேஷ் ஊர்மிலான்சு.

பாடலின் ஒவ்வொரு வார்த்தையிலும் கழிவிரக்கத்தையும், இசையின் ஒவ்வொரு துடிப்பிலும் வலியையும் கொண்டுவந்திருக்கிறார் ரமேஷ். தன் தவறை உணர்ந்து அதற்காக வருந்தும் ஒருவனின் கடைசி நேர வேண்டுதலைச் சில இடங்களில் மொழியின் துணையோடும் பல இடங்களில் இசையின் துணையோடும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE