‘டேக் கேர் தலைவா’: கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!

By காமதேனு

20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்துக்கொண்டிருந்த சர்ச்சைகளுக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் தலைவர். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது, இவருக்கு ஏன் வேண்டாத வேல என்றுதான் பெரும்பாலான ரசிகர்கள் கூறினார்கள். அவரை அரசியலுக்கு இழுத்து ஆதாயம் பார்க்க நினைத்தவர்கள் டிசம்பர் 31-ம் தேதி கட்சி பெயர் வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், கட்சியும் கிடையாது அரசியலும் கிடையாது என்று அறிவித்துவிட்டு ஒதுங்கிவிட்டார். எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களில் சிலருக்கு இது ஏமாற்றம்தான், என்றாலும் அரசியலை விரும்பாத பெரும்பாலான ரசிகர்கள் ரஜினியின் இந்த முடிவைக் கொண்டாடுகின்றனர். இணையம் முழுவதும் ரஜினிக்கு வாழ்த்துகளும் ‘டேக் கேர் தலைவா’ ஹேஷ்டேக்கும் தான் தூள் பறக்கிறது.

மக்கள் நீதி மய்யமும் திராவிடக் கட்சிதான்.  - கமல் 

அதாவது திராவிட கட்சி இல்லைன்னு சொல்லல. திராவிட கட்சியாக இருந்தால், நல்லா இருக்கும்னு சொல்ல வராரு போல! 
- மெத்தவீட்டான்

இரட்டை இலையை முடக்க சதி நடக்கிறது. - சி.வி.சண்முகம்

VIEW COMMENTS