வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
கரோனா வைரஸ் அடுத்த அவதாரம் எடுத்திருப்பதாக வரும் செய்திகள் உலக மக்களை பீதிகொள்ளச் செய்திருக்கும் நிலையில், கேரளத்தில் ‘ஷிகெல்லா’ எனும் தொற்றுநோய்ப் பரவல் தொடர்பாக வெளியான செய்திகள் பலரைத் திடுக்கிடச் செய்திருக்கின்றன.
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் இந்தத் தொற்றுநோய்க்குப் பலியாகியிருக்கும் நிலையில், குழந்தைகள், பெரியவர்கள் என 50-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் கேரள அரசு தீவிரம் காட்டுகிறது. ஆறுதல் அளிக்கும் விஷயமாக இதுவரை வேறு உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி எனும் பெரும் பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கும் நாம், ஷிகெல்லா தொடர்பாக அதிகப் பதற்றம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எனினும், இந்த நோய்த்தொற்றின் காரணிகளையும், பின்பற்ற வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் தெரிந்துகொள்வது அவசியம்.