என் வழி தனி வழி என்று சொன்ன ரஜினி எங்கள் வழியில் வரவேண்டாம்!- ‘பச்சை மனிதன்’ தங்க.சண்முகசுந்தரம் பாய்ச்சல்

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

இது நடிகர்கள் அரசியலுக்கு வரும் காலம் மட்டுமல்ல, ஆரம்ப நிலையிலேயே பல்வேறு இடையூறுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய காலமும்கூட!

 கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னம் கிடைக்க, எம்ஜிஆர் மக்கள் கட்சி இடையூறாக இருந்தது. பிறகு ஒருவழியாகச் சின்னத்தை விட்டுத்தர அக்கட்சித் தலைவர் விஸ்வநாதன் முன்வந்தார். கிட்டத்தட்ட அதுபோலவே, ரஜினி தொடங்கப்போகும் கட்சியின் பெயர் என சொல்லப்படும் ‘மக்கள் சேவை கட்சி’ எனும் பெயருக்கும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. 

‘அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்' எனும் பெயரில் சமூக சேவையிலும், இயற்கை சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவரும் தங்க.சண்முகசுந்தரம்தான் தற்போது இதை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சியைச் சேர்ந்தவரும், ‘பச்சை மனிதன்’ என்று அழைக்கப்படுபவருமான தங்க.சண்முகசுந்தரத்திடம் பேசினேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE