ஆன்லைனில் பங்கேற்க அழைப்பு... வீடுதேடி வந்த திருமண விருந்து..!

By காமதேனு

சாதனா
readers@kamadenu.in

கரோனா காலத்தில் அலுவலகச் சந்திப்புகள் தொடங்கி வகுப்புகள் வரை, அத்தனையும் இணையவழிக்கு இடம்பெயர்ந்துவிட்டன. அந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு திருமண விருந்து. ஆம்! இணையம் மூலம் திருமண நிகழ்வில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததுடன், விருந்தினர்களின் வீடுதேடி சுடச்சுட கல்யாணச் சாப்பாட்டையும் அனுப்பிவைத்து அசத்தியிருக்கிறார்கள், சென்னையைச் சேர்ந்த திருமண வீட்டார்.

ஆர்வம் கிளப்பிய அழைப்பிதழ்

திருமண வைபவத்தை இணையவழியில் கண்டுகளித்து, புதுமணத் தம்பதிக்கு ஆசீர்வாதம் வழங்கும்படி அந்த திருமண அழைப்பிதழ் கட்டியம் கூறியது. அழைப்பிதழின் கடைசி வரி இன்னும் கவனம் ஈர்த்தது. ‘உங்கள் வீடு தேடி வரும் கல்யாணச் சாப்பாட்டைப் பெற்றுக்கொள்வதன் மூலம் விழாவைச் சிறப்பிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’ எனும் அந்த வாசகமே புதுவிதமாகத் தோன்றியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE