பாமகவை அழிக்க அன்புமணியே போதும்!- காடுவெட்டி குரு மருமகன் மனோஜ் கிரண் காட்டம்

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் எதிரான ஆவேசம் காடுவெட்டி குரு குடும்பத்தினருக்கு இன்னமும் குறையவில்லை. மரணப் படுக்கையில் இருந்த குருவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பதில் தொடங்கிய கருத்து வேறுபாடு குடும்ப விவகாரமாகி, அடிதடி, அரிவாள் வெட்டுவரை சென்று வழக்கு நடக்கிறது. வன்னியர் சங்கம், பாமக ஆகியவற்றிலிருந்து முற்றாக விலகி, தனி அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறது குருவின் குடும்பம். குருவின் மகன் கனலரசன் வன்னியர் சங்கத்துக்கு இணையாக மாவீரன் மஞ்சள் படையைத் தொடங்கி, வன்னிய இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.

இந்த நிலையில் குருவின் மருமகன் மனோஜ் கிரண்  ‘தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி’ என்ற கட்சியை ஆரம்பித்திருக்கிறார். கட்சியைக் கட்டமைக்கும் பணிகளுக்கு இடையே ‘காமதேனு’ இதழுக்கு மனோஜ் அளித்த பேட்டி:

ஏற்கெனவே ஏகப்பட்ட கட்சிகள் இருக்கின்றன. இந்நிலையில் புதிதாக ஒரு கட்சி தேவையா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE