“சார், நீங்கள் சொல்லும்போதெல்லாம் அலட்சியமாக இருந்துவிட்டேன். அதற்கான விலையையும் கொடுத்துவிட்டேன்” என்று ரொம்பவே வருத்தப்பட்டார் அவர்.
நடந்தது இதுதான். அவர் முகக்கவசத்தைச் சரியாக அணிவது கிடையாது. எப்போதும் அலட்சியம்தான். இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவப் பணியாளர். பலமுறை அவரை எச்சரித்தேன். மனிதர் கேட்கவே இல்லை. காய்ச்சல் வந்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டபோதுதான் அவர் முகத்தில் மிரட்சி தெரிந்தது.
ஒருவழியாகக் குணமாகித் திரும்பிய பிறகு அன்றுதான் எனக்கு நன்றி சொன்னார். ஆனால் பாருங்கள்... இந்த முறையும் அவர் முகக்கவசம் அணியவில்லை. “கரோனா வந்தவர்களுக்கு மீண்டும் வராதாமே சார்? எனக்குத்தான் வந்துவிட்டுப் போய்விட்டதே” என்று அப்பாவியாய்க் கேட்டார். என்னத்தைச் சொல்ல!
பரிசோதனையைத் தவிர்த்தால்…