அண்ணாச்சி... இது தப்பாச்சி
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுகவுக்காக ‘ஐ பேக்’ டீம் தயாரித்துள்ள வேட்பாளர் பட்டியலில், மாவட்ட திமுக செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். கை காட்டிய ஆட்களுக்கும் இடம் கிடைத்திருக்கிறதாம். அதுவும் வழக்கம்போல கட்சிக்குச் சம்பந்தம் இல்லாத, தனக்கு ‘வளம்’ சேர்க்கும் நபர்களை டிக் செய்ய வைத்திருக்கிறாராம் அண்ணாச்சி. இந்த விஷயங்கள் எப்படியோ வெளியில் கசிந்து, ‘இந்தத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் பாஜக தேர்தல் சித்து வேலைகளைக் காட்டும். எம்எல்ஏ-க்களை பேரம் பேசி வளைக்கும் முயற்சிகளும் நடக்கலாம். அப்படியான சூழலில் கட்சிக்கு சம்பந்தமில்லாத தொழிலதிபர்களை ஜெயிக்க வைத்தால் அவர்கள் லாப நட்டக் கணக்குப் பார்த்து பாஜகவிடம் சோரம் போய்விடுவார்கள். எனவே, தலைமை இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என அண்ணாச்சிக்கு எதிராக தலைமைக்கு அபாயச் சங்கு ஊதியிருக்கிறார்களாம் உடன்பிறப்புகள்.
சிறப்பு... சிவிபி ஃபவுண்டேஷன்