ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
பெருவெடிப்பு நோய் கரோனா உலகைப் பீடித்ததுமே முதலில் ஸ்தம்பித்துப்போனது கல்வித் துறைதான். நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக எடுத்த எடுப்பில் பள்ளிகளும் கல்லூரிகளும்தான் காலவரையின்றி மூடப்பட்டன. தடைபட்டுப்போன கல்வியை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்க ஆன்லைன் கற்பித்தல் முறை இடைக்கால நிவாரணமாகக் கண்டறியப்பட்டது.
இணையவழிக் கல்வி கற்பிக்கும் முறையால் இந்தியா போன்ற நாட்டில் எத்தனை மாணவர்கள் பயனடைய முடியும் என்ற கேள்வியும் கவலையும் ஆரம்பத்தில் இருந்தே எழுந்தது. ‘இது இந்தியாவுக்கான சிக்கல் மட்டுமல்ல உலகின் பல நாடுகளுக்கும் பொருந்தும்’ என்ற அபாயச் சங்கொலியை யுனெஸ்கோ நிறுவனம் எழுப்பியது. இவை அல்லாது அத்தனை வசதிகள் இருந்தாலும் வீட்டில் இருந்தபடியேதான் பாடம் கற்க வேண்டும் எனும்போது தகவல்தொழில்நுட்ப சாதனங்களைக் கையாளும் திறன் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், அடிப்படை டிஜிட்டல் திறன் அற்றவர்களாகத்தான் பெரும்பாலான பெற்றோர் உள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் இணைய வழிப் பயன்பாட்டில் பரிச்சயம் இல்லை என்பதை யுனெஸ்கோ ஆய்வுபூர்வமாக நிறுவியது.
அரசின் கொள்கையும் தனியார் நடவடிக்கையும்!