வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மாநிலங்களவை எம்பி-யாகக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. “உச்ச நீதிமன்றம், உயர்ந்தபட்ச நடுநிலைத்தன்மையுடன் செயல்படுகிறது. அயோத்தி வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது” என்றெல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘அகில பாரதிய கார்யகாரி மண்டல் பைட்டக்’ எனும் அமைப்பு, பாராட்டியிருக்கும் தருணத்தில், ரஞ்சன் கோகோய் எம்பி-யாகப் பதவியேற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்தபோது அவர் அளித்த சில முக்கியத் தீர்ப்புகள், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்ததாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பதிலுபகாரமா இது என்பதுதான் இன்றைக்கு வெடித்திருக்கும் முக்கியக் கேள்வி!
மாறிப்போன பார்வை