என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
காதலுக்கு சாதி, மதம், இனம், மொழி என்று எந்த எல்லைகளும் இல்லை. மனதால் மட்டுமே இரு மனிதர்கள் இணையும் புனிதம்தான் காதல். தினமும் பல நூறு காதல் திருமணங்கள் நடந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில் பிரணவ் - சஹானா காதல் ஜோடியை மொத்தக் கேரளமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
கேரளத்தின் சாலக்குடி பகுதியைச் சேர்ந்த பிரணவ் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். உயர்தர சிகிச்சையால் உயிர் பிழைத்துவிட்டாலும் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டதால், இடுப்புக்குக் கீழ் செயல்படாத வகையில் அவரை முடக்கிப்போட்டு விட்டது அந்த விபத்து. இதனால் அவரது அன்றாட உலகம் சுருங்கிப்போய்விட்டாலும், அவர் சோர்ந்து விடவில்லை. அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அவரை அத்தனை அர்ப்பணிப்புடன் கவனித்துக்கொண்டனர். இதனால், உற்சாகம் இழக்காத பிரணவ், சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கத் தொடங்கி னார். குறிப்பாக, தன் மனதில் தோன்றும் எண்ணங் களைக் காணொலியாக எடுத்து முகநூலில் பதிவேற்றி வந்தார். இதனால் அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமும் உருவானது.
அப்படி, பிரணவுக்கு ஒரு ரசிகையாக அறிமுகமானவர்தான் சஹானா. திருவனந்த புரத்தைச் சேர்ந்த சஹானா, இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மலர்ந்தது. விஷயத்தை தனது வீட்டில் சஹானா சொன்னபோது, மதம் மட்டுமல்லாமல், பிரணவின் உடல்நிலை வரை பல்வேறு காரணிகளைச் சொல்லி காதலுக்குத் தடை
போட்டனர் அவரது குடும்பத்தினர்.