பதவிக்காக ரஜினியிடம் யாசகம் கேட்க மாட்டேன்!- தமிழருவி மணியன் தடாலடி

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

ரஜினியை முதல்வராக்க வேண்டும் என்று ரஜினியைவிட அதிகமாக உழைப்பவர் தமிழருவி மணியன். திராவிடக் கட்சிகளை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு இதைவிட்டால் இன்னொரு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கும் அவரை புதன்கிழமை காலையில் தொடர்புகொண்டேன். “செவ்வாய்க்கிழமை மவுன விரதத்தை இப்பதான் முடிச்சிட்டு, போனை ஆன் பண்ணினேன், முதல் அழைப்பே உங்களிடம் இருந்துதான்” என்றவர், மடைதிறந்த வெள்ளம் போல் பேசினார்.

“ரெண்டு பெரிய ஜாம்பவான்கள் அசுர பலத்தோட இருக்காங்க” என்கிறாரே ரஜினி. பயந்துவிட்டாரா?

 ரஜினியின் அந்தக் கருத்தில் முற்றிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. ரஜினி தன்னுடைய வலிமையைக் குறைத்தும், மாற்றானுடைய வலிமையை மிகையாகவும் மதிப்பிடுகிறார். ஆட்சியில் இருப்பதால்தான் அதிமுக ஒரு சக்தி வாய்ந்த அமைப்பு போலத் தெரிகிறது. ஆட்சியை இழக்கிற கணத்திலேயே அக்கட்சி பல துண்டுகளாகச் சிதறக்கூடிய வாய்ப்பு உண்டு. திமுகவுக்கு எப்போதுமே 20 முதல் 25 சதவீத வாக்குகள்தான் விழும். கலைஞர் இல்லாத சூழலில் அதுவும் குறைந்துபோகும். இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் ரஜினிக்கு இருக்கிற செல்வாக்கு வேறு எந்தத் தலைவருக்கும் கிடையாது என்பதே நிதர்சனம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE