இனி எல்லாமே ஏ.ஐ- செயற்கை நுண்ணறிவு: ஓர் அறிமுகம்

By காமதேனு

சைபர்சிம்மன்
enarasimhan@gmail.com

தோள் மீது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைத் தூக்கிச் சுமந்துகொண்டு அலுவலகம் செல்லும் காட்சியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஒரு காலத்தில் இந்தக் கற்பனையே பலருக்கு விநோதமாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று நாம் சர்வசகஜமாக அலுவலங்களுக்குக் கம்ப்யூட்டரைக் கையோடு எடுத்துச்செல்கிறோம். அதைத்தான் ‘லேப்டாப்’ என்கிறோம்!
இவ்வளவு ஏன், நாள் முழுவதும் நம் கைகளில் தவழும் ஸ்மார்ட்போனும்கூட ஒரு கம்ப்யூட்டர்தான். சந்தேகமாக இருக்கிறதா? முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அழைத்துச்சென்ற ‘அப்பல்லோ 11’ விண்கலத்தில் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் அமைப்பின் ஆற்றலைவிட, இன்றைய ஸ்மார்ட்போனில் உள்ள ஆற்றல் அதிகமானது எனும் தகவலைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒப்பீட்டு நோக்கில் அப்பல்லோ கம்ப்யூட்டரின் ‘ரேம்’ (RAM) வெறும் 4 கேபி (KB) என்றால், தற்போதைய நவீன ஸ்மார்ட்போனின் ரேம், அதைவிட லட்சம் மடங்குக்கு மேல் அதிகம்.

மூர் விதி

இதையெல்லாம் கடந்த தலைமுறையினர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். கம்ப்யூட்டர் துறையில் பல்வேறு பிரிவுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பாய்ச்சல்களே இந்த முன்னேற்றங்களுக்கு எல்லாம் முக்கியக் காரணம். கம்ப்யூட்டருக்குள் பயன்படுத்தப்படும், சிப்பின் அளவு குறைந்துகொண்டே வரும் என்பதோடு, அதன் ஆற்றலும் பன் மடங்கு அதிகரிக்கும் என கணித்த மூர் விதி (Moore's Law) தான் இவற்றுக்கு எல்லாம் அடிப்படை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE