சவுதி அரசுக்கு எதிராகச் சதி- இளவரசர்களைக் கைதுசெய்த ‘எம்.பி.எஸ்’

By காமதேனு

சந்தனார்
readers@kamadenu.in

அவ்வப்போது பரபரப்பான செய்திகளில் அடிபடும் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், இந்த முறை அரச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளவரசர்களைக் கைது செய்திருப்பதன் மூலம் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

சவுதி மன்னரான சல்மானின் தம்பி அஹமது பின் அப்துல் அசீஸ், இளவரசர் முகம்மது பின் நயீஃப், அவரது சகோதரர் நவாஃப் பின் நயீஃப் ஆகியோருடன் பல உயரதிகாரிகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சவுதி அரசுக்கு எதிராகச் சதி செய்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைக்கு மன்னர் சல்மான் முழு ஆதரவு தெரிவித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. முகம்மது பின் நயீஃப் பட்டத்து இளவரசராக இருந்தவர் என்பதும், 2017-ல் அவரை நீக்கிவிட்டு எம்.பி.எஸ்ஸைப் பட்டத்து இளவரசராக அறிவிக்க மன்னர் சல்மான் முடிவெடுத்தபோது, அதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களில் அஹமது பின் அப்துல் அசீஸும் ஒருவர் என்பதும் கவனிக்கத்தக்க விஷயங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE