பாஜக நிர்பந்தத்தால்தான் வாசனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதா?- பதில் சொல்கிறார் வைகைசெல்வன்

By காமதேனு

கே.சோபியா
readers@kamadenu.in

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும் அதிமுக ராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது போலும். அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளராகியிருக்கும் கே.பி.முனுசாமி, தமிழகத் திட்டக்குழு துணைத் தலைவராகியிருக்கும் பொன்னையன் ஆகியோரைப் பேட்டிக்காகத் தொடர்பு கொண்டேன். “பதவியேற்ற பிறகு பேசுகிறோம். கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்று விலகிக்கொண்டார்கள். அதிமுகவின் லகான் எடப்பாடியிடம் இருக்கிறதா, டெல்லியில் இருக்கிறதா என்ற சந்தேகத்தோடு அக்கட்சியின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் வைகைசெல்வனிடம் பேசினேன். அவரது பேட்டி:
 
பாஜகவின் நிர்பந்தத்தால்தான், அதிமுக ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை சீட் கொடுத்திருக்கிறது என்கிறார்களே?

கூட்டணிக் கட்சிகளை ஊறுகாய் போல தொட்டுக் கொள்வதும், இதயத்தில் இடம் கொடுப்பதாகச் சொல்லி ஒப்புக்குச் சப்பாணியாகப் பயன்படுத்துவதும் திமுக பாணி. கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களிலும் திட்டமிட்டுத் தோற்கடிப்பதும்கூட அவர்களுக்குக் கை வந்த கலை. அதிமுக அப்படியல்ல. கொடுத்த இடத்தில் வெற்றி பெற வைப்பதைத் தவமாகச் செய்யும் அதிமுக, இப்போது கூட்டணிக்கும் சம வாய்ப்பும், சம பங்கும் தருவது என்கிற புதிய சித்தாந்தத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் தமாகாவுக்கு சீட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாஜக பரிந்துரை எல்லாம் வதந்தி என்று ஜி.கே.வாசனே பதில் சொல்லிவிட்டார்.

தமாகாவைவிட தேமுதிக பெரிய கட்சிஅல்லவா... ஆனால், பிரேமலமதா வெளிப்படையாகவே சீட் கேட்டும் தரவில்லையே?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE