கரோனா பாதிப்பு பரவாமல் தடுக்க அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த ‘இருமல்’ காலர் ட்யூன் திட்டத்தைச் செயல்படுத்தியது. இதை வைத்துக் கொண்டு, “போன் பண்ணும்போது இருமினானே யாரு சிம்ரன் அது...” என்று வடிவேலு கோவை சரளாவிடம் கேட்கும் மீமில் ஆரம்பித்து, பல கலாய் மீம்களை உருவாக்கி உலாவ விட்டார்கள் நெட்டிசன்கள். இதனால் கரோனாவைவிட கரோனா விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாகப் பரவியது. வாரம் முழுக்க கரோனா ட்ரெண்டிங்கில் இருந்த நிலையில் வார இறுதியில் ட்ரெண்டிங் வண்டியில் ரஜினி ஏறினார். ரஜினி முக்கிய முடிவை அறிவிக்கப் போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மீன் குழம்பு, சர்க்கரைப் பொங்கல் என்று வழக்கம்போல பேசி, “மக்களிடம் எழுச்சி வரும்போது அரசியலுக்கு வருகிறேன்” என்று அரசியல் அல்வா கிண்டினார் ரஜினி. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் ‘அண்ணாத்த’வை அநியாயத்துக்கு வறுத்தெடுத்தார்கள்.
மற்ற கட்சிகள் ஆட்சி செய்ய நாங்கள் கட்சி தொடங்கவில்லை!- அன்புமணி
`நிழல் பட்ஜெட்' போடுறதுக்காக மட்டும்தான் தொடங்குனீங்களா பாஸ்..?- மயக்குநன்
5 மற்றும் 8-ம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதினால் 10-ம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதும்போது பயம் இருக்காது.- முதல்வர் பழனிசாமி