பாட்டாலே புத்தி சொன்னார்... விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யும் கருங்குயில்கள்

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

பாடல் வடிவில் சொல்லப்படும் பாடங்கள் என்றைக்குமே மறக்காது. அதனால்தான், சுகாதார விழிப்புணர்வு தொடங்கி சமூக விழிப்புணர்வு வரை இசை வடிவிலான பிரச்சாரங்கள் எல்லோரையும் சென்றடைகின்றன. அந்த வகையில், மது ஒழிப்பு, டெங்கு விழிப்புணர்வு, கல்வியின் இன்றியமையாமை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு... என  சமூகத்துக்குத் தேவையான கருத்துகள் அடங்கிய கானங்களை மக்களுக்கு வழங்கிவருகிறது சிவகங்கையைச் சேர்ந்த ‘கங்கை கருங்குயில்கள்’ கலைக்குழு.

சமீபத்தில் கோவை மக்களுக்குப் பாடல் மூலம் பாடம் சொல்ல வந்திருந்த கலைக்குழுவினரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். குழுவினர் வந்திருந்த வாகனமே விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தாங்கி மக்களின் கவனத்தைக் கவர்ந்தது. மதுபானம், கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் வேனின் இருபுறமும் எழுதப்பட்டிருக்கின்றன. வேன் அரை வட்டம் அடித்து நின்றவுடன் அதிலிருந்து குதிக்கிறார்கள் கலைஞர்கள். நாடக பாணி மினுக்கும் பட்டுடை, ஒப்பனையுடன் சிலர். தவில், பறையிசைக் கருவியுடன் நான்கைந்து பேர். தலையில் கரகம் சூடி மூன்று பெண்கள்.
‘டண்… டண்… டணக்கு… டண்டணக்கு…’ என தவில், பறை இசை ஓங்கி ஒலிக்கிறது. மையமாக இருப்பவர் பறை தாளத்திற்கு ஏற்ப பாட ஆரம்பிக்கிறார்.

‘சொல்லச் சொல்ல குடிக்கிறான்
சோறில்லாம கெடக்கிறான்
அல்லும் பகலும் உழைக்கிறான்
எல்லாம் குடிச்சே தொலைக்கிறான்…’ 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE