மூச்சுக் காற்று இருக்கும்வரை முடங்க மாட்டேன்!- குரலற்றவர்களுக்காக உழைக்கும் கிருஷ்ணம்மாள்

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

நாடு போற்றும் காந்தியர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் பெற்றுத் தர உழைத்தவர், வயல்வெளிகளை நாசமாக்கிய இறால் 
பண்ணைகளுக்கு எதிராகத் தன் கணவர் ஜெகநாதனுடன் இணைந்து போராட்டம் நடத்தியவர்… இப்படி உழைக்கும் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.

இன்றைக்குக் குடிநோய் முதல் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் வரை சமகால அவலங்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார். கவலைப்படுவதுடன் நிறுத்திவிடாமல், அவற்றுக்கான தீர்வுகளையும் தீர்க்கமாக முன்வைக்கிறார். இந்த 96 வயதிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக இந்தியா முழுவதும் சளைக்காமல் சுற்றிவரும் கிருஷ்ணம்மாளை, நாகை மாவட்டம் கீழ்வேளுர் அருகேயுள்ள கூத்தூரில் சந்தித்தேன்.

எளிமையின் சிகரம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE