கம்யூனிஸ்ட்களுக்கு மூளை புரண்டு போச்சு!- எகிறியடிக்கும் எச்.ராஜா

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தினம் ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி எதிர்க்கட்சிகளைத் திணறடிப்பதில் வல்லவரான எச்.ராஜா, அவ்வப்போது சொல்லும் அரசியல் கருத்துகள் பரபரப்புத் திரியைப் பற்றவைத்துவிடுகின்றன. டெல்லி கலவரம் தொடங்கி, தமிழக அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முடிவெடுத்திருப்பது என்று எல்லாப் பிரச்சினைகளுக்கும் எதிர்க்கட்சிகளைக் கைகாட்டிவிட்டு கலகமூட்டிவிடுகிறார் ராஜா. அவருடன் ஒரு அதிரடி பேட்டி:
    
டெல்லியில் நடந்தது பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் திட்டமிட்டு நடத்திய கலவரம் என்று கம்யூனிஸ்ட் குற்றம் சாட்டியிருக்கிறதே?

டெல்லி போராட்டத்துல தினமும் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள்தான் பங்கேற்று ஊக்குவித்துப் பேசினாங்களா? ஒவைஸி முன் நின்னுக்கிட்டு, வாரிஸ் பதான்னு ஒரு எம்எல்ஏ, “100 கோடி இந்துக்களை 15 கோடி முஸ்லிம்கள் விரட்டிவிடுவோம்”னு பேசினாரே… அவர் பாஜககாரரா? ‘பாகிஸ்தான் வாழ்க’ன்னு கோஷம் போட்டாரே ஒரு பெண்... அவர் ஆர்எஸ்எஸ்ஸா... பாஜகவா? செல்வாக்கு போனதால, கம்யூனிஸ்ட்டுகளுக்கு மூளை புரண்டு போச்சு.

டெல்லியில் மாதிரி வண்ணாரப்பேட்டையிலும் கலவரம் நடக்கும் என்கிறீர்களே, மிரட்டலா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE