பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்... - உண்மையான அக்கறையா, கண்துடைப்பு நாடகமா?

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக முன்
வைத்த மிக முக்கியக் கோரிக்கை, யாருமே எதிர்பாராத ஒரு தருணத்தில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 9-ம் தேதி முதல்வர் பழனிசாமியால் அறிவிக்கப்பட்டு, 19-ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, 20-ம் தேதி சட்டமன்றத்திலும் இது நிறைவேற்றப் பட்டுவிட்டது. இதற்கு ஆளுநரின் ஒப்புதலையும் பெற்று, அரசிதழிலும் வெளியிட்டு விவசாயிகளின் மனதைக் குளிரச்செய்திருக்கிறது தமிழக அரசு.

அதேசமயம், இச்சட்டம் டெல்டாவை முழுமையாகப் பாதுகாக்க வழிசெய்யவில்லை என்றும், அழிவை ஏற்படுத்தும் திட்டங்கள் டெல்டாவிலிருந்து முழுமையாக அகற்றப்பட வழிசெய்யவில்லை என்றும் அதிருப்திக் குரல்கள் டெல்டாவெங்கும் அலையடிக்கின்றன.

குழப்பமான சட்டம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE