பலத்தைக் கூட்ட பதவி விலகினாரா? - மகாதீரின் மகா திட்டம்

By காமதேனு

சந்தனார்
readers@kamadenu.in

மலேசியப் பிரதமர் பதவியிலிருந்து மகாதீர் முகமது ராஜினாமா செய்திருப்பது, அந்நாட்டில் அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மகாதீர் எடுத்திருக்கும் இந்தத் திடீர் முடிவு, மலேசியாவில் மட்டுமல்ல... உலகம் முழுவதும் பல்வேறு கேள்விக்குறிகளை எழுப்பியிருக்கிறது. அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட மாமன்னர் சுல்தான் ஐந்தாம் முகம்மது, இடைக்காலப் பிரதமராக நீடிக்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பதவி விலகுவதற்கான காரணம் என்று மகாதீர் எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், மலேசிய ஐக்கிய மக்கள் கட்சித் தலைவரான மகாதீருக்கும், பாக்காத்தான் ராக்யாட் கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமுக்கும் இடையிலான தனிப்பட்ட மோதலாகவே இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது. இருவரும் மலேசியாவின் மிக முக்கியத் தலைவர்கள். மலேசிய அரசியல் களத்தை வளர்த்தெடுத்ததில் பெரும் பங்கு வகிப்பவர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE