லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
தூளிகளில் உறங்கும் குழந்தைகளை இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிவதில்லை. பல வீடுகளில் மெத்தையில்தான் குழந்தைகளைத் தூங்கவைக்கிறார்கள். தூளியில் உறங்கும் குழந்தைகள் நிம்மதியாக உறங்குவது சாத்தியம். குழந்தையின் தாய் அணியும் புடவையைத் தூளியாகப் பயன்படுத்துவதே குழந்தைக்கு இதமாகவும் கதகதப்பாகவும் இருக்கும். தூளியை முன்னும் பின்னும் அசைப்பதில் குழந்தை தானாக உறங்கிவிடும். தவிர, குழந்தை சிறுநீர் கழித்துவிட்டால் அது தூளியின் மடிப்பு வழியே கீழே இறங்கிப் போய்விடும். காற்றில் அசைவதால் துணியும் சீக்கிரமே காய்ந்துவிடும்.
ஆனால், மெத்தையில் குழந்தையைத் தூங்கவைக்கும்போது இதெல்லாம் சாத்தியமில்லை. டயபர்தான் அணிவிக்க வேண்டியிருக்கிறது. அதையும் தாண்டி மெத்தை ஈரமாவதைத் தடுக்க ரப்பர் ஷீட் போடுகிறோம். இதனால், குழந்தை இரவு முழுவதும் ஈரத்தில் படுத்திருக்க நேர்கிறது. இது குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் அவஸ்தையை ஏற்படுத்தும் விஷயம். இந்தப் பிரச்சினையை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதுதான் ‘லூமி’ (Lumi).
என்ன செய்கிறது?