என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
கேரளத்தின் காசர்கோடு மாவட்டம், கன்ஹன்காட் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு நடுவில் அருகில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்குள் அவசர அவசரமாக நுழைகிறார்கள் இஸ்லாமியர்கள். கோயிலில் இந்து முறைப்படி நடந்துகொண்டிருந்த திருமணத்துக்கு மலர் தூவி மனமார வாழ்த்துகிறார்கள். மணமகளின் பெற்றோர் ஸ்தானத்தில் நின்று திருமணத்தை நடத்தியவர்கள் முஸ்லிம் தம்பதி என்பதுதான் இந்நிகழ்வின் விசேஷம்!
காசர்கோடு மாவட்டத்தின் மேலப்பரம்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா - கதீஜா தம்பதியின் மகள் ராஜேஷ்வரிதான் மணமகள். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த ராஜேஷ்வரியைத் தங்கள் மகளாகவே வளர்த்து வந்த அப்துல்லா - கதீஜா தம்பதி, அந்தப் பெண்ணுக்கு இந்து முறைப்படியே திருமணமும் செய்துவைத்திருக்கிறார்கள்.
மணக்கோலத்தில் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருந்த ராஜேஷ்வரியிடம் பேசினேன்.