லும்ஸாக் - கை கொடுக்கும் பை

By காமதேனு

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

இப்போதெல்லாம் வயது வித்தியாசமின்றி பலரும் ‘படையப்பா’ ரஜினி பாணியில், பேக்பேக் (Backpack) ஒன்றை மாட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள். அதில் லேப்டாப் முதல் லஞ்ச் பாக்ஸ் வரை சகல சாமான்களையும் சுமந்துசெல்கிறார்கள். இவை தவிர செல்போன் சார்ஜர், இயர் போன், வீட்டுச் சாவிகள், வாகனச் சாவிகள், புத்தகங்கள், மாத்திரைகள்… இன்னபிற சமாச்சாரங்களும் இதில் அடக்கம்.

இப்படி உடலுடன் சேர்ந்த கவச குண்டலம் கணக்காய் இருக்கும் முதுகுப்பையைச் சுமந்துகொண்டு தொலைதூரப் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களுக்கு, வரப் பிரசாதமாய் வந்திருக்கிறது ‘லும்ஸாக்’ (Lumzag).

பொதுவாகவே பல இடங்களுக்குப் பயணிப்பவர்கள் சில அசவுகரியங்களை எதிர்கொள்வார்கள். கிராமப்புறப் பகுதிகளுக்கோ வனப் பகுதிகளுக்கோ செல்லும்போது செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற முடியாது. பவர் பேங்கே கைகொடுக்காத நிலையில் பதற்றம் கூடிவிடும். இதையெல்லாம் தாண்டி, கிளம்பும் அவசரத்தில் சில முக்கியப் பொருட்களை மறந்து வீட்டிலேயே விட்டுவிடுவோம்.
இவற்றையெல்லாம் மனதில் கொண்டு அதிநவீன முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் முதுகுப் பைதான் இந்த ‘லும்ஸாக்’. வெறும் பொருட்களை அடைத்து எடுத்துச்செல்லும் ஒரு பையாக மட்டும் அல்லாமல் அறிவு, ஆற்றல், பாதுகாப்பு, கட்டுப்பாடு எனும் நான்கு வகை குணங்களும் அடங்கிய நல்ல பையாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE