பூமியைக் காக்க 10 பில்லியன் டாலர்!- அமேசானின் திடீர் கரிசனம்

By காமதேனு

சந்தனார்
readers@kamadenu.in

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் 71 ஆயிரம் கோடி ரூபாய்!) நன்கொடையாக வழங்குவதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அறிவித்திருப்பது உலகை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பெசோஸ், இதுதொடர்பான அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

இயற்கையைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் செயற்பட்டாளர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு ‘பெசோஸ் எர்த் ஃபண்ட்’ எனும் அமைப்பின் மூலம் நிதி உதவி வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெசோஸின் இந்த அறிவிப்பில் இருப்பது நிஜமான அக்கறையா, அல்லது தன் மீதான விமர்சனங்களுக்கான பதிலடி மட்டும்தானா எனும் விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

விமர்சனம் ஏற்படுத்திய மாற்றம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE