பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்ததில் என்ன தவறு?- பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் தொகுதிக்கு ஆற்றிய பணிகளை ஆண்டு தோறும் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை வரும் முன்பே அதைச் செயல்படுத்தி வருபவர் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அதேநேரத்தில், தனது பணியில் சுறுசுறுப்பாக இல்லை என்ற விமர்சனமும் அவர் மீது உண்டு. திமுக எதிர்கொண்டுவரும் சவால்கள் குறித்து அவருடன் ஒரு பேட்டி.

திமுகவின் அரசியல் வியூக ஆலோசகராக பிரஷாந்த் கிஷோரை நியமித்தது விமர்சனமாகியிருக்கிறதே?

 நான் ஒரு பணக்காரன் என்றால், என் சொத்தை, என் மீதான வழக்கை, என் உடல் நலத்தைக் கவனிப்பதற்கென்று ஒரு நல்ல ஆடிட்டர், சிறந்த வழக்கறிஞர், திறமையான ஜிம் பயிற்றுநர் போன்றோரைப் பணம் கொடுத்து அமர்த்திக் கொள்கிறேன். அதேபோல நாங்கள் ஒரு கட்சி நடத்துகிறபோது, எதிரிகளின் சூழ்ச்சிகளை எல்லாம் முறியடித்து, அதை வெற்றிபெற வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE