கரோனாவும் கருத்து சுதந்திரமும்- எழத் தொடங்கியிருக்கும் எதிர் குரல்கள்

By காமதேனு

சந்தனார்
readers@kamadenu.in

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா வைரஸால் ஏற்படும் நோய்க்கு ‘கோவிட்-19’ (COVID-19) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் சூழலில், இந்த வைரஸ் பரவலைச் சீன அரசு எதிர்கொண்ட விதம், கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. 

மிக முக்கியமாக, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான சீன அரசின் கட்டுப்பாடுகளை விமர்சிக்கும் குரல்கள் சீனாவுக்குள்ளிருந்தே ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

கரோனா வைரஸ் பரவல் முதலில் தொடங்கிய வூஹான் நகரைச் சேர்ந்த மருத்துவப் பேராசிரியர்களும், சீனாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும், அரசுக்கு எழுதியிருக்கும் திறந்த மடலில், ‘சீன அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் கருத்து சுதந்திரம் தொடர்பான சட்டக்கூறுகளை நடைமுறையில் அமல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் தொடர்பாக முதன்முதலில் எச்சரிக்கை விடுத்த வூஹான் மருத்துவர் லீ வென்லியாங் உள்ளிட்ட எட்டுப் பேரை அரசு நடத்திய விதமும், இறுதியில், கரோனா வைரஸ் பாதிப்பில் லீ உயிரிழந்ததும் சீன மருத்துவர்களிடமும் மக்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE