அரசை எதிர்க்கும் அனுராக்!- பாஜகவை பகைக்கும் பாலிவுட் குரல்

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

பல்வேறு பிரச்சினைகளில் சுதந்திரமாகக் கருத்து தெரிவிக்கும் பாலிவுட் திரையுலகின் முக்கியஸ்தர்கள் பலர், குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்.ஆர்.சி போன்றவை தொடர்பாக வாய் திறக்க மறுப்பதைப் பார்க்க முடிகிறது. அமிதாப் பச்சன் தொடங்கி கான் நடிகர்கள் வரை பாலிவுட் பாதுஷாக்கள் பலரும் கனத்த மவுனம் காக்கிறார்கள். ஜாமியா பல்கலைக்கழகத்தில் படித்தவரான ஷாரூக் கான் அப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் டெல்லி போலீஸ் நடத்திய தாக்குதல் குறித்து வாயே திறக்கவில்லை.

இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப், மோடியையும் அமித் ஷாவையும் மிகக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருக்கிறார். இவ்விஷயத்தில் அரசை விமர்சிக்கும் சக பாலிவுட் கலைஞர்களான தீபிகா படுகோன், நஸ்ருதீன் ஷா, ஸ்வரா பாஸ்கர் போன்றோரின் வரிசையில் உறுதியாக நிற்கிறார் அனுராக்.

அனுராகின் ரிஷிமூலம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE