தஞ்சை குடமுழுக்கு விழாவுக்கு தமிழக முதல்வர் வராதது ஏன்?- மூட நம்பிக்கைதான் காரணமா?

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

தமிழரின் பண்பாட்டிற்கும், கட்டுமானக் கலைக்கும் ஆயிரம் ஆண்டுகால கம்பீர சாட்சியமாக விளங்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா விமரிசையாக நடந்துமுடிந்திருக்கிறது. தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் ஒலித்த மந்திரங்களைச் செவிமடுத்தபடி குடமுழுக்கை தரிசித்திருக்கிறார்கள் ஏராளமான தமிழர்கள். ஆனால், திராவிட இயக்கப் பாரம்
பரியத்தில் வந்த தமிழக அரசியல் கட்சியினர் பலரும், மூடநம்பிக்கையின் காரணமாக இந்த விழா பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை என்பதுதான் மிகப் பெரிய சோகம்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியனைத் தவிர இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் யாரும் கோயில் பக்கமே வரவில்லை. அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த  தஞ்சைப் பகுதி முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர்கூட இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. தமிழக முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் காவிரி புஷ்கரம் விழாவிலெல்லாம் கலந்து கொண்டு காவிரியில் நீராடி வழிபட்டனர். ஆனால், அவர்கள் இருவருமே தஞ்சை குடமுழுக்கு விழாவைக் கவனமாகத் தவிர்த்துவிட்டார்கள்.

‘தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி வளர்கிறது’, ‘ஒரே இரவில் ஒரு பூதம் இந்தக் கோயிலைக் கட்டியது’ என்றெல்லாம் நிலவும் கட்டுக்கதைகளைப் போல, பதவியில் இருப்பவர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றால் அவர்களின் பதவிக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்றொரு மூடநம்பிக்கையும் அரசியல் தலைவர்களிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. அதுதான் தலைவர்களை குடமுழுக்கு வரவிடாமல் தடுத்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE