கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
கங்கை அமரன், ராதாரவி, பொன்னம்பலம், நமீதா இவர்கள் வரிசையில் இயக்குநர் பேரரசுவும் பாஜகவில் இணைந்திருக்கிறார். ஆனால், மற்றவர்களில் இருந்து இவர் ரொம்பவே வித்தியாசமானவர். பேட்டிக்காக தொடர்பு கொண்டபோது ரொம்பவே ஆச்சரியப்படுத்தினார். வெறுமனே சினிமா பிரபல்யத்தை வைத்து மட்டும் அரசியலுக்கு வந்தவரில்லை என்பது, பேரரசுவின் முதல் இரண்டு பதில்களிலேயே புரிந்துபோனது. இனி பேட்டி...
ஏனிந்த திடீர் அரசியல் பிரவேசம்... அதுவும் பாஜகவில்..?
அப்பா திமுகவில் இருந்து எம்ஜிஆருடன் வெளியேறி, அதிமுகவில் இருப்பவர்தான். ஆனால், மாநிலத்துக்குள்ளேயே சுருங்கிவிடாமல், தேசிய அரசியலில் முத்திரை பதித்த காமராஜரும், பசும்பொன் தேவரும் தான் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் தேசப்பற்று, மதப்பற்று, மொழிப்பற்று இருக்க வேண்டும் என்பது எனது கொள்கை. அதற்குப் பொருத்தமான கட்சியாக பாஜக இருப்பதால் அதன் மீது ஓர் ஈர்ப்பு. அதற்காக அக்கட்சியின் எல்லாக் கொள்கையுமே எனக்குப் பிடிக்கும் என்று அர்த்தமில்லை.
கலைத்துறையினரை குறிவைத்துத் தூக்குகிறது பாஜக என்கிறார்கள். இழுக்கப்பட்டீர்களா... நீங்களே வந்தீர்களா?