`சரஸ்வதி சிந்து நாகரிகம்' என்பது அப்பட்டமான அறிவுத் திருட்டு!- சு.வெங்கடேசன் எம்.பி சுளீர்

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

கீழடியில் மத்திய அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டோர் குரல் கொடுத்துவந்த நிலையில், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்துக்கு நிதி ஒதுக்கியிருக்கிறது அரசு. பட்ஜெட் உரையின்போது, ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்று சிந்து சமவெளி நாகரிகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதும் பல தரப்பிலிருந்து அதிருப்தியைக் கிளப்பியிருக்கிறது. இவை குறித்து சு.வெங்கடேசன் எம்.பியிடம் பேசினேன். அவரது பேட்டி:

`சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே' என்று நீங்கள் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கையில், மத்திய நிதியமைச்சர் அது சரஸ்வதி நதிக்கரை நாகரிகம் என்று கூறியிருக்கிறாரே?

இது அப்பட்டமான வரலாற்றுத் திரிபு.  "இந்தியாவின் வரலாறே வேத வரலாறுதான், இந்தியப் பண்பாடு என்பதே வேதப் பண்பாடுதான்" என்று தொடர்ந்து சொல்லிவந்தவர்கள், இப்போது ஹரப்பா மொகஞ்சதரா நாகரிக விஷயத்திலும், வரலாற்றைத் தலைகீழாகத் திருப்பப் பார்க்கிறார்கள். ஹரப்பன் எழுத்துக்கள் எதுவும் உலக ஆய்வாளர்கள் யாராலும் இதுவரையில் வாசிக்கப்படவே இல்லை. அங்கு கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்துமே சித்திர எழுத்துக்கள். ஆனால், அந்த எழுத்தை வாசித்ததாகவும், அவை வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சொற்கள்தான் என்றும் இவர்கள் அடித்துச் சொல்கிறார்கள். இது அப்பட்டமான அறிவுத் திருட்டு, நாகரிகத் திருட்டு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE