சிறுநீரகம் தந்த சீதாதம்பி!- புனர்ஜென்மம் அடைந்த ஜெயகிருஷ்ணன்

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தானத்தைவிட வேறொரு நற்காரியம் இருக்க முடியாது. அதுவும், உறுப்பு தானம் செய்ய உயர்ந்த எண்ணம் வேண்டும். உடல்நிலை மோசமாகித் தவிப்பவர்களுக்கு உறுப்பு தானம் செய்ய உறவினர்களே தயங்கும் சூழலில், முன்பின் அறிமுகமில்லாத சிறுவனுக்கு சிறுநீரகத்தைத் தானம் செய்து, தாய்மையின் மேன்மையைக் காட்டியிருக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த சீதாதம்பி.

சீதாதம்பியின் சிறுநீரகத்தைத் தானமாகப் பெற்ற ஜெயகிருஷ்ணனின் கதை மிகவும் பரிதாபமானது.

பாலக்காட்டைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன், 11-ம் வகுப்பு படித்து வந்தான். மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்த இவனை வளர்த்துவந்தது இவனது பாட்டிதான். வீடு, பள்ளி என்று இயல்பாக நகர்ந்துகொண்டிருந்த இவனது வாழ்வில், சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்புயல் வீசத் தொடங்கியது. திடீரென உடை எடை கூடியது. தூங்கி விழித்துப் பார்த்தால் முகமும் காலும் விகாரமாக வீங்கிக் கிடந்தன. அதீத உடல்சோர்வும் வாட்டி எடுத்தது. சாதாரண வைட்டமின் குறைபாடாக இருக்கும் என்று நினைத்து மருத்துவமனைக்குச் சென்ற ஜெயகிருஷ்ணனுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE