கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
தொலைக்காட்சி விவாதம், சண்டை சச்சரவில் முடிவது வழக்கம்தான் என்றாலும், சீமானுக்கும், பேராசிரியர் அருணனுக்கும் இடையே நடந்த மோதலுக்குப் பிறகு மீண்டும் ஓர் உக்கிரமான மோதலைப் பார்த்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகம். தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடமாக மாறிவிட்டது என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்ன கருத்து தொடர்பாக நடந்த அந்த விவாதத்தில், அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலியும், பாஜகவின் நாராயணன் திருப்பதியும் தாறுமாறாக மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்றியிருக்கிறது. இருவரிடமும் பேசினேன்.