வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 8-ல் நடக்கவிருக்கும் நிலையில், தலைநகரில் அரசியல் நிலவரம் சூடு பிடித்திருக்கிறது. இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்திலிருந்து அகற்ற ஒரு பக்கம் பாஜகவும் மறுபக்கம் காங்கிரஸும் கோதாவில் குதித்திருக்கின்றன. அர்விந்த் கேஜ்ரிவால் அரசின் செயல்பாடுகள், பாஜக - காங்கிரஸ் வகுக்கும் வியூகங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் என்று பல்வேறு அம்சங்கள் இந்தத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறையும் தனித்தே போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி, 70 தொகுதிகளிலும் வெல்வதே லட்சியம் என்று தீவிரமாகக் களமாடிவருகிறது. ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி ஆகியவற்றின் கூட்டணியுடன் களம் காண்கிறது பாஜக. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறது காங்கிரஸ்.
மூன்றாவது முறை வெல்வாரா?