தொகுப்பு: தேவா
ரஜினியும் பெரியாரும்
சூப்பர் ஸ்டார் ரஜினி சர்ச்சையிலும் சூப்பர் ஸ்டார் என்பதை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் முழுக்க ‘துக்ளக்’ வைத்திருப்பவர்கள் அறிவாளி என்று சொன்னது பெரிய அளவில் வைரலானது. கடந்த வாரம் முழுக்க பெரியாரைப் பற்றிய சர்ச்சைப் பேச்சை நியாயப்படுத்திப் பேசியது பெரும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து ரஜினி பற்றி பழைய கதைகளெல்லாம் இணையத்தில் பரப்பப்பட்டன. அதில் நடிகை லதாவுடனான காதலும் ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆருக்கும் ரஜினிக்கும் இடையே நடந்த விவகாரமும் அடக்கம். பெரியாரைப் பற்றி ரஜினி பேச்சுக்குத் திமுகவினரைவிட அதிமுகவினர் அதிகம் கொந்தளித்ததை ஆச்சரியமான விஷயமாகவே எல்லோரும் பார்க்கின்றனர். நெட்டிசன்களைக் காட்டிலும் அதிமுக பிரமுகர்கள் அனைவருமே ரஜினிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடி முதல் விஞ்ஞானி செல்லூர் ராஜு வரை யாரும் ரஜினியை விட்டுவைக்கவில்லை. மத்திய அரசுக்கு அடிபணிந்து போய்க்கொண்டிருப்பவர்களையே ரோஷம் அடைய வைத்துவிட்டார் ரஜினி என்கின்றனர் நெட்டிசன்கள்.
பாஜக தமிழகத்தில் ஆட்சி செய்ய வாய்ப்புக் கிடைத்தால், பெரியார் தொண்டு நிறுவனம் பொதுவுடைமை ஆக்கப்படும். - எச்.ராஜா
வாய்ப்புதானே? முதல்ல சாரணர் தேர்தல்ல நின்னு ஜெயிச்சிட்டு வாங்க சென்றாயன்! - ஷிஜா