ஆசிரியர்களுக்கான பணிச்சூழலும் பாதுகாப்பும்!

By காமதேனு

உமா
uma2015scert@gmail.com

ஒரு மாணவரின் கழிவை இன்னொரு மாணவரை வைத்து அப்புறப்படுத்தச் சொன்னார் ஒரு ஆசிரியர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தச் செயலுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அண்மையில், அந்த ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் உமாமகேஸ்வரி என்ற ஆசிரியரை மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி உயிர் பிரிந்த சம்பவத்தையும் நாம் மறந்திருக்க மாட்டோம்.

12 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்துறையில் உள்ள ஒரு பள்ளியில், சிறப்பு வகுப்புக்கு வராத மாணவனை ஆசிரியர் காரணம் கேட்கிறார். அதற்காக அந்த மாணவன் தற்கொலை செய்துகொள்கிறான். இந்த வழக்கிலிருந்து மீள்வதற்குள் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் அடைந்த மன உளைச்சல்கள் கொஞ்ச நஞ்சமல்ல!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE