ஆஸ்திரேலியாவை அழிக்கும் அலட்சியம்!- பிரச்சினையைப் புரிந்துகொள்ளாத பிரதமர்

By காமதேனு

சந்தனார்
readers@kamadenu.in

ஆண்டின் தொடக்கத்திலேயே உலகை கடும் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீதான். கோடிக்கணக்கான வன விலங்குகளும் பண்ணை விலங்குகளும் தீயின் நாவுகள் தீண்டி பரிதாபமாக உயிரிழந்தன. கங்காருகள், கோலா கரடிகள் என்று பல்வேறு விலங்குகள் கருகிக் கிடந்த காட்சிகள் கல்நெஞ்சம் கொண்டவர்களையும் கலங்கச் செய்தன. இது போதாது என்று, வறட்சிக்குக் காரணம் எனப் பழிசுமத்தப்பட்டு சுமார் 10,000 ஒட்டகங்கள் அரசாலேயே சுட்டுக்கொல்லப் பட்டிருப்பது உலகமெங்கும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அழிந்துபட்ட உயிர்கள்

உலகின் பிற நிலப் பகுதிகளிலிருந்து ஒதுங்கியே இருக்கும் ஆஸ்திரேலியாவின் பல்லுயிர்ச் சூழல் அபரிமிதமானது. 244 வகையான பாலூட்டிகள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழ்கின்றன. இதுபோன்ற பிரத்யேக பெருமைகளுக்குரிய ஆஸ்திரேலியாவில் இன்றைக்கு 1.56 கோடி ஹெக்டேர் வனப் பகுதிகள் காட்டுத் தீயில் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உயிர்ச் சங்கிலியில் ஒரு கண்ணி அழிந்தாலும், ஒட்டுமொத்த உயிர்ச் சங்கிலியும் பாதிப்புக்குள்ளாகும் என்பார்கள். ஆஸ்திரேலியாவிலோ இதுவரை 100 கோடி விலங்கினங்கள் காட்டுத் தீக்குப் பலியாகியிருக்கின்றன. மனிதர்களின் வாழ்க்கையையும் உருக்குலைத்திருக்கிறது இந்தக் காட்டுத் தீ. இதுவரை 25 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியிருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE