கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
மாநிலம் சார்ந்த சிந்தனைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் இந்தியப் பொதுவுடமைக் கட்சிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கும் காலகட்டத்தில், இடதுசாரிகளின் தமிழக முகமாகப் பணியாற்றுபவர் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே மொழி கொள்கைக்கு எதிராகத் தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கும் அவருடன் ஒரு பேட்டி.
உள்ளாட்சித் தேர்தலில் முதலில் உங்கள் அணி முந்தினாலும், கடைசியில் அதிமுக கூட்டணி வென்றுவிட்டதே?
உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் துளியும் விரும்பாத அதிமுக அரசு, உச்ச நீதிமன்ற கெடு காரணமாகத்தான் வேறு வழியின்றி தேர்தலை அறிவித்தது. நாடாளுமன்றத் தேர்தலைப் போல திமுக அணி ஒட்டுமொத்தமாக வென்றுவிடக் கூடாதே என்ற பதற்றத்தில், கிராமப்புறங்களுக்கு மட்டும் அதுவும் இரண்டு கட்டமாகத் தேர்தல், தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் என்று என்னவெல்லாமோ செய்தார்கள். அப்படியிருந்தும் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்குப் பெரிய பின்னடைவையே தந்தன. ஆனால், தலைவர் தேர்தலில் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் சேர்த்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அவர்களுக்குப் பெரிய அடி கொடுப்பார்கள்.