டீக்கடையிலிருந்து சரலூர் ஜெகன்... அனுபவங்களைப் படைப்புகளாக்கும் சாமானியர்!

By காமதேனு

என்.பாரதி
readers@kamadenu.in

வாழ்க்கையில் எதிர்படும் சவால்களைக் கண்டு துவளாமல் துணிச்சலுடன் நடைபோடுபவர்கள் ஏதேனும் ஒரு வகையில் சாதிக்கத்தான் செய்கிறார்கள். குடும்பச் சூழல் காரணமாக, இளம் வயதிலேயே வேலைக்குச் சென்று, அதில் கிடைத்த அனுபவங்களின் மூலம் எழுத்துலகுக்குள் நுழைந்த சரலூர் ஜெகனின் வாழ்க்கையும் அப்படியானதுதான்.

இன்றைக்கு டீக்கடைப் பணியாளர், எழுத்தாளர், குருதிக் கொடையாளி என்று பல்வேறு முகங்கள் கொண்ட மனிதராகப் பரிணமித்திருக்கும் சரலூர் ஜெகன், எழுத்தையும் சேவையையும் இணைந்தே செய்கிறார்.

நாகர்கோவில் நகரின் மையப் பகுதியான செட்டிக்குளத்தில் தனது உறவினர் ஒருவர் நடத்திவரும் தேநீர்க் கடையில் பணிபுரியும் சரலூர் ஜெகனைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வாடிக்கையாளர்களுக்கு வடையையும் தேநீரையும் கொடுத்துக்கொண்டே, என்னிடம் பேசத் தொடங்கினார். “என்கூட பிறந்தவங்க அஞ்சு பேர். அப்பா தங்கையா நாடார் காய்கறிக் கடை நடத்திட்டு இருந்தார். கூடவே, கருப்பட்டி வியாபாரமும் பார்த்தார். ‘குமரித் தந்தை’ நேசமணியோட மொழிப் போராட்டங்களிலும் அப்பா கலந்துக்கிட்டார். நான் 11-ம் வகுப்பு படிக்கும்போதே உடம்பு சரியில்லாம அப்பா இறந்துட்டார். வீட்ல நான்தான் மூத்தவன். அதனால, அத்தோட படிப்புக்கு முழுக்கு போட்டுட்டு கடைகளுக்கு வேலைக்குப் போயிட்டேன்” என்று சொல்லும் சரலூர் ஜெகன், சைக்கிள் கடை, ஸ்வீட் ஸ்டால் போன்றவற்றில் பணிபுரிந்தவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE