ஆக்யுலஸ் எல்லாம் மாயா!

By காமதேனு

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

உலகத்தை முழுமையாகப் பார்த்துவிட்டவர்கள் என்று யாருமில்லை. அந்த அளவுக்குப் பிரம்மாண்டமானது உலகம். நிஜ உலகமே இப்படியென்றால், எல்லைகளே இல்லாத கற்பனை உலகின் பிரம்மாண்டத்தை நினைத்துப் பாருங்கள். ஆனால், இந்தக் கற்பனைகளையும் உண்மைக்கு மிக அருகில் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு கருவிதான் நாளை உலகை ஆளப்போகிறது, மாற்றியும் அமைக்கப்போகிறது. அதுதான் ‘ஆக்யுலஸ்’ (Oculus) எனும் மெய்நிகர் தொழில்நுட்ப (Virtual reality) சாதனம்!
மெய்நிகர் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் பல ஆண்டுகளாக முயற்சிகள் நடந்தாலும், 1990-களில்தான் அந்தத் தொழில்நுட்பம் பரவலான பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியது.

1991-ல், சேகா (Sega), விர்ச்சுவாலிட்டி (Virtuality) போன்ற நிறுவனங்கள், மெய்நிகர் சாதனத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தன. இன்றைய தேதியில் பல்வேறு பயன்பாடுகளுக்குப் பரந்து விரிந்திருக்கும் மெய்நிகர் சாதனங்கள் கணினி விளையாட்டு முதல் ராணுவம், மருத்துவ சிகிச்சை வரை பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆக்யுலஸ் வரலாறு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE