திரும்பி வந்தார்... தேர்தலில் வென்றார்!- திருநங்கை ரியாவின் வெற்றிக் கதை

By காமதேனு

ரோகிணி
readers@kamadenu.in

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தந்திருக்கும் உற்சாகச்செய்திகளில் ஒன்று, திருச்செங்கோடு ஒன்றியத்தில் வார்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திருநங்கை ரியாவின் வெற்றி. திமுக சார்பில் போட்டியிட்ட ரியா, அதிமுக வேட்பாளர் சின்னராஜூவை 950 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். ரியாவைச் சந்தித்துப் பேச திருச்செங்கோடு வண்டியேறினேன்.

திருச்செங்கோடு - சங்ககிரி சாலையில் இருக்கும் கருவேப்பம்பட்டி பகுதியில் டீக்கடை வைத்திருக்கும் கே.ஆர்.சின்னசாமிதான் முதலில் எதிர்பட்டார். இவர் இப்பகுதி சிபிஐ(எம்) கட்சி செயலாளரும்கூட.

“பட்டியலினப் பொதுப் பிரிவுல ரியாவைத் திமுக வேட்பாளரா அறிவிச்சப்ப, பலருக்கும் இவர் ஜெயிப்பார்னு நம்பிக்கை வரலை. ஆனா, ‘என்னை உங்க பொண்ணா நினைச்சுக்குங்க. தங்கச்சியா நினைச்சுக்குங்க. எனக்கு ஓட்டுப் போடுங்க, இங்கிருக்கிற பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபடுவேன்’னு ரியா வெகுளியா பேசுனது இங்க உள்ளவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுடுச்சு. உதயசூரியன் சின்னம் வேற… அமோக வெற்றி கிடைச்சுடுச்சு. எது எப்படியோ ஒரு திருநங்கையைத் தேர்ந்தெடுத்த ஊர்ல இருக்கோம்ங்கிறதே எங்களுக்கெல்லாம் பெருமைதான்” என்றவர் ரியாவின் வீட்டிற்கு வழி சொல்லி அனுப்பி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE