ரோகிணி
readers@kamadenu.in
தமிழர்கள் எங்கு வசித்தாலும் தங்களுக்கான உரிமைகளைப் போராடியே பெற வேண்டியிருப்பது துரதிருஷ்டம். அண்டை மாநிலமான கேரளத்தில் வசிக்கும் தமிழர்களும் தங்கள் உரிமைகளைக் கோரி மலையாளத்தில் மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் இந்தக் குரல்கள் சற்று ஓங்கி ஒலித்தன. ‘தமிழர்களுக்கு எனத் தனி சட்டமன்றத் தொகுதியை ஒதுக்க வேண்டும்’ என்று ஒலித்த குரல்தான் அதில் ஹைலைட்.
ஒரு நபர் ஆணையம்
கேரளத்தில் மொழிச் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காண முதன்முதலாக ஒரு நபர் ஆணையத்தை நியமித்துள்ளது பினராயி விஜயன் அரசு. அதற்காக டிசம்பர் 27, 28 தேதிகளில் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழர்களிடம் நேரடி விசாரணை நடத்தினார் இந்த ஆணையத்தின் தலைவர் நடுவட்டம் கோபாலகிருஷ்ணன். விசாரணையில் என்ன நடக்கிறது என்று பார்க்க நேரில் சென்றிருந்தேன்.