முஸ்லிம்களின் தேசபக்தி பற்றிப் பேச பாஜகவுக்கு அருகதையில்லை!- பேராசிரியர் ஜவாஹிருல்லா பேட்டி

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் தீவிரமடைந்துள்ள சூழலில், மறுபக்கம் தமிழக பாஜகவும் காய்நகர்த்தத் தொடங்கிவிட்டது. கோலம் போட்டவர்கள் தொடங்கி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணன் வரை பலர் கைதுசெய்யப்படுகிறார்கள். போராட்டக்காரர்களுக்குப் பகிரங்கமான மிரட்டல்களை பாஜக தலைவர்கள் விடுக்கிறார்கள். இந்தச் சூழலில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் பேசினேன்.

இஸ்லாமிய அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறாரே?

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதற்காக ஒருவர் கைது செய்யப்பட வேண்டுமெனில், முதலில் எச்.ராஜாவைத்
தானே இந்த அரசு கைது செய்திருக்க வேண்டும்? “கவிஞர் வைரமுத்துவின் தலை உருண்டிருக்க வேண்டாமா?” என்றும், “கல்லூரி வளாகத்துக்குள் இருந்து கல் வீசப்பட்டால் வெளியேயிருந்து உள்ளே குண்டுகள் பாயும்” என்றும் பேசியதோடு நில்லாமல், தந்தை பெரியார், உயர் நீதிமன்ற நீதிபதி, தமிழகக் காவல் துறை தலைவர் போன்றோரை இழிவான வார்த்தையால் விமர்சித்தவர் அவர். பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக விமர்சித்த எஸ்.வீ.சேகரைக் கைது செய்ய உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும் காவல் துறை கைது செய்யவில்லை. “பெண்களை சைட் அடிப்பதற்காகவே மாணவர்கள் போராட்டத்துக்கு வருகிறார்கள்” என்று சொன்ன ஒய்.ஜி.மகேந்திரன், கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும், மாணிக் தாகூர் எம்பியைச் சுட்டுத்தள்ள வேண்டும் என்றும் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வைரமுத்துவின் தலையை வெட்ட வேண்டும் என்று பேசிய நயினார் நாகேந்திரன் ஆகியோரை ஏன் கைது செய்யவில்லை? சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிராகப் பாரபட்சமான முறையில் காவல் துறையின் நடவடிக்கை அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE