நெல்லை கண்ணனின் பின்னணியை விசாரிக்க வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் பொளேர்

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

சர்ச்சை பேச்சுக்காக நெல்லை கண்ணன் கைது, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகக் கோலப் போராட்டம் எனப் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கிறது தமிழக அரசியல் களம். இப்படியான சூழலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினேன்.

நெல்லை கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,  எச்.ராஜாவும் அப்படித்தானே பேசுகிறார்... ஏன் அவர் கைது செய்யப்படவில்லை?

 சினிமாவில் வரும் தாதாக்கள் எங்கோ ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு தன்னுடைய ஆட்களுக்கெல்லாம் உத்தரவு பிறப்பிப்பார்கள். அதைத்தான் நெல்லை கண்ணனும் செய்திருக்கிறார். "பிரதமரையும் உள் துறை அமைச்சரையும் ஏன் போட்டுத்தள்ளவில்லை?" என்றுதானே பகிரங்கமாக மேடையில் கேட்கிறார்? ஏற்கெனவே முஸ்லிம் பயங்கரவாதிகளால் பாஜகவினர் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கும் அந்தக் கூட்டத்துக்கும் தொடர்பு இருக்கிறது எனும் சுயபுரிதலிலின் அடிப்படையில்தான் நெல்லை கண்ணன் அப்படிப் பேசுகிறார். அவர் அப்படிப் புரிந்துகொள்ள மட்டும் செய்கிறாரா அல்லது அந்தக் கூட்டத்துக்கு அவர் தலைவரா என்று தெரியவில்லை. இதுவரை இந்து இயக்கத்தினர் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கும் நெல்லை கண்ணனுக்கும் தொடர்பு உள்ளதா என்பதும் ஆராயப்பட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE