இப்ப ஹிட் கொடுக்கும் எழுத்தாளர்களே இல்லை!- வருத்தம் பகிரும் ‘லெண்டிங் லைப்ரரி’ தியாகு

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

தமிழில் வாசிப்புப் பழக்கம் சுருங்கி, அரசு நூலகங்களே வெறிச்சோடிக் கொண்டிருக்கும் சூழலில், அபூர்வமாகிவிட்ட ‘லெண்டிங் லைப்ரரி’யை 40 வருடங்களாக விடாப்பிடியாக நடத்திக் கொண்டிருக்கிறார் தியாகு என்கிற தியாகராஜன். அதுவும், உயர்தட்டு மக்களும், வர்த்தக மையங்களும் நிரம்பி வழியும் கோவை ஆர்.எஸ்.புரம், கேப்டன் பழனிசாமி தெருவில் இதை நடத்திவருகிறார். சொந்தமாக வாடகை கொடுத்து இவர் நடத்திவரும் இந்த நூலகத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் இருக்கின்றன; ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘இலக்கியக்கூடுகை’ எனும் பெயரில் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார் என்றெல்லாம் அறிந்து தியாகுவைக் காணச் சென்றேன்.

பளபளக்கும் அடுக்குமாடிக் கட்டிடத்தில் இயங்கிவருகிறது அந்த நூலகம். படிகள் ஏறினால் எதிர்ப்படும் ஒற்றைக் கதவு. உள்ளே நோக்கினால் அலமாரிகளில் அடுக்கப்பட்ட புத்தகங்கள் தெரிகின்றன. குரல் கொடுத்ததும் நூலகக் கதவின் மேஜைக்குப் பின்னாலிருந்து எழுந்துவருகிறார் தியாகு. நூலகத்தில் வேறு யாருமே இல்லை.

“கூட்டமே இல்லையே? எப்படி இதைத் தொடர்ந்து நடத்துறீங்க... வாடகையே கணிசமான தொகை வருமே?” என்றதும் புன்னகைக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE